Saturday, August 29, 2009

கம்ப்யூட்டர் நீண்ட காலம் உழைக்க வேண்டுமா?

தற்போதைய ஐ.டி. உலகில், நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கம்ப்யூட்டர்தான் வாழ்க்கையாக அமைந் துள்ளது. அதில் தான் பெரும்பாலான நமது நேரம் செலவிடப்படுகிறது. நிதி நடவடிக்கைகள் முதல் நமக்கு பிடித்த இசையைக் கேட்பது வரை அனைத்துமே கம்ப்யூட்டர் வழியாகத்தான். இந்த நிலையில் கம்ப்யூட்டர் வேலை செய்யாமல் போனால் என்ன ஆகும்?


தற்போது செய்து கொண்டிருக்கும் முக்கியமான பணிகள் காணாமல் போய் விடும். நாம் சேமித்து வைத்திருந்த தகவல்கள் எல்லாம் அழிந்து விடும். இது போன்ற சிக்கல் வருவதற்கு முன்பே, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிகளின் மூலம் சிக்கல்கள் நேராதவாறு பராமரிக்கலாம்.



கம்ப்யூட்டர்களை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யுங்கள்

வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்வது மிக முக்கியம். ஸ்கேன் செய்வதால் ஹார்டு டிஸ்கில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



அப்டேட்களுடன் கூடிய ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை இன்ஸ்டால் செய்யுங்கள்

எந்த ஒரு கம்ப்யூட்டரும் வேலை செய்யாமல் போவதற்கு முக்கியக் காரணம் வைரஸ் ஊடுருவலே. இதனால் சந்தைகளில் உள்ள வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம்.

சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஆன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருள்களே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகின்றன.

No comments:

Post a Comment