Saturday, March 12, 2011

தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள்




சித்தர்களின் தலைவர் அகத்தியர் வாழும் பாபநாசம் மலையடிவாரத்திலிருந்து தாமிரபரணி நதிக்கரையோரம் 97 கி.மீட்டர்கள் தூரத்துக்குள் இந்த நவக்கிரகஸ்தலங்கள் அமைந்துள்ளன. 

இவை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களால் பெரும்பாலும் வழிபாடு செய்யப்பட்டுவருகின்றன.ஏனெனில்,இந்த கோயில்கள் பற்றி சிலருக்கே தெரிந்திருக்கின்றன.


அகத்திய முனிவரின் சீடரான உரோமச  முனிவர் முக்தியை வேண்ட, ஸ்ரீ அகத்திய மாமுனிவரின் கூற்றுப்படி, ஜீவ நதியான தாமிர பரணியில், ஒன்பது தாமரை மலர்களை விட்டு, அவை கரை ஒதுங்கும் இடத்தில், ஸ்ரீ கைலாசநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, முக்தி பெற்றார் அவ்வாறு ஏற்பட்ட நவ கயிலாய ஸ்தலங்களான

1. பாபநாசம்  2. சேரன்மாதேவி   3. கோடகநல்லூர்  4. குன்னத்தூர்  5. முறப்பாடு  6. ஸ்ரீ வைகுண்டம்  7. தென் திருப்பேரை  8. இராஜபதி  9. சேர்ந்த பூமங்கலம்  

[T_500_871.jpgபாபநாசம்.jpg]
பொதிகைமலை எனப்படும் பாபநாசம் மலையில் பாணதீர்த்தம் அருவியின் அருகில் சூரியபகவானின் அம்சமான சிவலிங்கம் அமைந்துள்ளது.இந்தக்கோவில் காலை மணி 6.30 முதல் 11.30 வரையிலும்,மாலை 4.30 முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின் அர்ச்சகர்கள் திரு.சதாசிவபட்டர் மற்றும் திரு.ஹரிகரசுப்பிரமணியன் விக்கிரமசிங்கபுரம் தெற்குமாடவீதியில் வசிக்கின்றனர்.


சேரன்மகாதேவியில் சந்திரபகவானின் அம்சமாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.இக்கோவில் காலை 7 முதல் 9 வரையிலும்,மாலை 5.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.சந்துரு,சேரன்மகாதேவியில் அக்ரஹாரம் தெருவில் வசிக்கிறார்.இவரது செல்:9442226511.

கோடகநல்லூரில் செவ்வாய்பகவான் சிவபெருமானாக எழுந்தருளிவருகிறார்.இந்தகோவில் காலை 7 முதல் 8.30 வரையிலும்,மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.சுரேஷ் சிவாச்சாரியார் அவர்களின் போன்:04534-261849.

குன்னத்தூரில் ராகுபகவானின் அம்சத்துடன் இருப்பவர் சிவபெருமான்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 6 வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின் அர்ச்சகர் திரு.ராமச்சந்திரன் என்ற சந்துரு திருவேங்கடநாதபுரம் என்ற இடத்தில் வாழ்கிறார்.இவரது செல்:9442018567,9442018077.

முறப்பநாடு என்ற இடத்தில் உள்ள சிவபெருமானே குரு பகவானாக அருள்பாலிக்கிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் பெயர்:திரு.செல்லப்பா ஐயர்,இவரது செல்:9842404559.

ஸ்ரீவைகுண்டத்தில் சிவபெருமான் சனிபகவானின் அம்சமாகத் திகழ்கிறார்.ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து நிலையம் அருகில் இருப்பவர் பெருமாள்.அவரைத் தாண்டி ஒரு தெரு தள்ளிதான் சிவபெருமான் இருக்கிறார். சனிப்பிரதோஷ நாள் மட்டும் மாலை 4.30 முதல் 6.00 வரை சிவ வழிபாடு செய்தால் 5 வருடங்களுக்கு தினமும் சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது சைவசித்தாந்த விதிமுறையாகும்.  இக்கோவில் காலை 7 முதல் 10 மணி வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.கே.சிவகுருபட்டர்.கோவில்வாசல்.போன்:04630-252117.

தென் திருப்பேரையில் புதன் பகவானின் அம்சமாக சிவபெருமான் அருள்பாலித்துவருகிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 8 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.கமலேஷ் பட்டர் செல்:9365889291.

கேது பகவானின் அம்சம் பெற்ற சிவபெருமான் ராஜபதியில் இருக்கிறார்.இக்கோயில் ஏரலுக்கும் குரும்பூருக்கும் இடையில் இருக்கின்றது.இக்கோவில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். குருக்கள் : திரு.லட்சுமணன்,திரு.ஜோதி செல்:9787382258,9942062825.

சுக்கிரபகவானின் அம்சமான சிவபெருமான் சேர்ந்தபூமங்கலம் என்ற ஊரில் வாசம் செய்கிறார்.இக்கோவில் காலை 7.30 முதல் 9.30 வரையிலும்,மாலை 5.30 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர்கள் திரு.குமாரசுவாமிபட்டர் மற்றும் திரு.ஈஸ்வரபட்டர் செல் மற்றும் போன்:9486178063,04639-239319.


பாபநாசத்திலிருந்து சேரன்மகாதேவி 22 கி.மீதூரத்திலும்,
சேரன்மகாதேவியிலிருந்து கோடகநல்லூர் 15 கி.மீ.தூரத்திலும்,
கோடகநல்லூரிலிருந்து குன்னத்தூர் 12 கி.மீ.தூரத்திலும்,
குன்னத்தூரிலிருந்து முறப்பநாடு 18 கி.மீ. தூரத்திலும்,
முறப்பநாட்டிலிருந்து ஸ்ரீவைகுண்டம் 20 கி.மீ.தூரத்திலும்,
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தென் திருப்பேரை 6 கி.மீ.தூரத்திலும்,
தென் திருப்பேரையிலிருந்து இராஜபதி 4 கி.மீ.தூரத்திலும் அமைந்துள்ளன.

ஆக மொத்தம் 97 கி.மீ.தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன.

ஆன்மீக சுற்றுலாவில் ஆர்வம் இருக்கும் அன்பர்கள், தவறாமல் பயன் படுத்திக் கொள்ளவும்.


Read more: http://www.livingextra.com/2011/02/blog-post_10.html#ixzz1GNfjxewN