கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில், நீங்கள் பெரிய வல்லுநரோ அல்லது புதியவரோ, முக்கிய விஷயங்கள் சிலவற்றை நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1. இரண்டு கிளிக்: விண்டோஸ் சிஸ்டத்தில் இருமுறை கிளிக் செய்வது, பைல் ஒன்றைத் திறப்பதற்காக. ஆனால் இதனையே, இணைய தளம் ஒன்றில், இன்னொரு தளத்திற்கான லிங்க் தொடர்பின் மேல் கிளிக் செய்வதற்கோ, டயலாக் பாக்ஸில் கிளிக் செய்வதற்கோ பயன்படுத்தக் கூடாது. இதனால் தளம் இரண்டு டேப்களில் திறக்கப்படும்; அல்லது உங்களுடைய ஆப்ஷன் இரண்டு முறை அனுப்பப்படும். சிலர், படிவங்களில் தகவல்களை நிரப்பிவிட்டு, இறுதியில் அதனை அனுப்பும் Submit பட்டனில் இரண்டு முறை கிளிக் செய்வார்கள். இது இரண்டு விண்ணப்பங்களை அனுப்பிவிடும். எனவே எந்த இடத்தில் இரண்டு முறை கிளிக் செய்திட வேண்டுமோ, அங்கு மட்டுமே இருமுறை கிளிக் செய்திட வேண்டும்.
2.சரியான சாய்வுக் கோடு (Slashbackward and forward): கம்ப்யூட்டர் குறியீடுகளில் முன் மற்றும் பின் சாய்வுக் கோடு முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இவற்றை மாற்றிப் பயன்படுத்துவது, விரும்பும் செயல் பாட்டி னைத் தராது. \ என்பது பின் சாய்வுக் கோடு (backward). /என்பது முன் சாய்வுக் கோடு (forward). விண்டோஸ் இயக்கத்தில் உள்ள கோப்புகள் உள்ள இடங்களைச் சுட்டிக் காட்டி வழிகளை அமைக்கையில் பின் சாய்வுக் கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. எ.கா. C:\Program Files\Whatever . . இணைய முகவரிகளில் முன் சாய்வுக் கோடுகள் அமைக்கப்படுகின்றன. எ.கா.http://www.dinamalar.com
3. பிழைச் செய்தி பதிவு: சிஸ்டம் இயங்குகையில் பல வேளைகளில் பிழைச் செய்திகள் காட்டப்பட்டு, இயக்கம் முடங்கிப் போகும். இந்த பிழைச் செய்திகளை அலட்சியப்படுத்தாமல் அவற்றை எப்படியாவது குறித்து வைக்க வேண்டும். அதனை செலக்ட் செய்து டெக்ஸ்ட் பைல் ஒன்றில் ஒட்டி வைக்கலாம். தேர்ந்தெடுக்க இயலாவிட்டால், அப்படியே இமேஜ் பைலாக சேவ் செய்து, பின்னர் அதனைப் பார்த்து மெசேஜ் என்னவென்று டைப் செய்து வைக்கலாம். இந்த பிழைக்கான தீர்வு காண முயற்சிக்கையில், சாப்ட்வேர் நிறுவனத்திற்கு இதனை அனுப்பிக் கேட்கலாம். அல்லது கூகுள் தேடலில் இதனை பேஸ்ட் செய்தால், இது போல பிரச்னை ஏற்பட்டவர்கள், அப்போது என்ன செய்தார்கள் என்ற விளக்கத்தினைப் பெறலாம்.
4. அழிந்த பைல் மீட்பு: கோப்பு ஒன்றை, கம்ப்யூட்டரில் இருந்து அழிக்கும் போது, அது அப்படியே அழிக்கப்படுவதில்லை. இந்த பைல் இங்கிருக்கிறது என்று கம்ப்யூட்டரின் சிபியுவிற்குச் சொல்லப்படும் இன்டெக்ஸ் குறியீடுதான் அழிக்கப்படுகிறது. இது அந்த பைல் இருக்கும் ஹார்ட் டிஸ்க் இடத்தைப் பின்னர் வேண்டும்போது மற்ற பைல்களுக்குப் பயன்படுத்தலாம் என்ற செய்தியைக் கம்ப்யூட்டருக்குத் தருகிறது. எனவே நாம் விரும்பாமல் ஏதேனும் பைல் ஒன்றை, ரீசைக்கிள் பின்னிலிருந்தும் எடுக்க முடியாத நிலையில் அழித்துவிட்டால், ஹார்ட் டிஸ்க்கிலிருந்து அதனைப் பெறலாம். இதற்கு ரெகுவா (Recuva)போன்ற பைல் மீட்கும் புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.
5. ஹார்ட் டிஸ்க்கை முழுமையாக அழிக்க: பயன்படுத்திய கம்ப்யூட்டரை மற்றவருக்குக் கொடுக்கிறீர்கள். அல்லது விற்கிறீர்கள். அப்போது ஹார்ட் டிஸ்க்கினை எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. பைல்களை அழித்துவிட்டுக் கொடுப்பதாக இருந்தால், முழுமையாக அவற்றை அழிக்க வேண்டும். ஏனென்றால், இதனைப் பெறும் மற்றவர்கள், அழிந்த பைல் மீட்டுத் தரும் புரோகிராம்கள் மூலம் உங்களின் பெர்சனல் தகவல்களைப் பெற்றுவிடும் வாய்ப்புகள் உள்ளன.
6. தேவையற்ற இன்ஸ்டால் : ஏதேனும் பயன்பாட்டு சாப்ட்வேர் புரோகிராம்களை உங்கள் கம்ப்யூட்டரில் பதியும்போது, அது தரும் கூடுதல் வசதிகளை இன்ஸ்டால் செய்திட வேண்டாம். பின்னர் எப்போது வேண்டுமானாலும், அந்த புரோகிராம் தரும் தளம் சென்று, பதிந்து கொள்ளலாம். ஏனென்றால், கூடுதல் வசதிகள் ஒவ்வொரு முறையும் புரோகிராமுடன் இயங்கத் தொடங்குகையில், அவை தொடங்க அதிக நேரம் எடுப்பதுடன், கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில், ராம் மெமரியில் அதிக இடம் எடுக்கும். எனவே அப்ளிகேஷன் சாப்ட்வேர் ஒன்றை பதிந்து கொள்கையில், கூடுதல் வசதிக்கான செக் பாக்ஸ் மற்றும் ரேடியோ பட்டன்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால், அவற்றை நீக்கி இன்ஸ்டால் செய்திடவும்.
7. கிளீனர்களை நம்ப வேண்டாம்: நாம் நம்பிக்கை வைத்திருக்கும் தளங்கள் சிலவற்றில், உங்கள் கம்ப்யூட்டரை சுத்தப்படுத்த, இந்த இடத்தில் கிளிக் செய்திடுங்கள் என சில லிங்க்குகள் இருக்கும். ரெஜிஸ்ட்ரியைச் சரி செய்திடலாமே! ஸ்பைவேர்களை எடுக்கவா, இலவசமாய்! என்று சில லிங்க்குகள் இருக்கும். பெரும்பாலான இந்த லிங்க்குகள் நமக்கு உதவி செய்வதைக் காட்டிலும், உபத்திரவம் தருவதாகவே அமையும். இக்கட்டில் மாட்டிவிட்டு, பணம் கட்டு என்று சொல்லும் தளங்களும் உள்ளன. எனவே இவற்றைப் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்கவும்.
8. தேவையற்றவற்றை நீக்குக: மிகவும் ஆசையாக சில அப்ளிகேஷன் சாப்ட்வேர்களைப் பதிந்து பயன்படுத்தி இருப்பீர்கள். காலப் போக்கில் அதன் மேம்படுத்தப் பட்ட அல்லது கூடுதல் வசதிகளுடன் கூடிய சில சாப்ட்வேர்களையும் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். இந்நிலையில், பழைய சாப்ட்வேர்களை, கம்ப்யூட்டரிலிருந்து நீக்குவதே நல்லது. கண்ட்ரோல் பேனல் சென்று, Add/Remove Programs பிரிவின் மூலம் பழையனவற்றை நீக்கிவிடுங்கள்.
9: சிந்திய திரவம்: லேப்டாப் பயன்படுத்துபவர்கள் பலர் இந்த நெருக்கடிக்கு ஆளாவார்கள். லேப்டாப் பயன்படுத்திக் கொண்டே தண்ணீர், காபி, டீ என பானங்களைச் சாப்பிடுவார்கள். அப்படியே சில வேளைகளில் கவனமின்றி லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இது சிதறிவிடும். உடனே அதனை இணைத்திருக்கும் பவர் ப்ளக்கை நீக்கவும். பவர் ப்ளக்கில் இல்லை என்றால், கம்ப்யூட்டர் உள்ளே இருக்கும் பேட்டரியை நீக்க வேண்டும். இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து சாதனங்களையும், வெப் கேமரா, யு.எஸ்.பி. போர்ட்டில் உள்ள ட்ரைவ் போன்றவை, நீக்க வேண்டும். உடனே லேப்டாப்பினைத் தலைகீழாக கவிழ்த்து அந்த திரவத்தினை வெளியே கொண்டு வரும் முயற்சியில் இறங்க வேண்டாம். நல்ல உறிஞ்சும் தன்மையுடைய துணி கொண்டு, ஒற்றி எடுக்க முயற்சிக்கலாம். லேப்டாப்பினை வெவ்வேறு திசைகளில் அசைப்பதன் மூலம், மேலே உள்ள திரவம் இன்னும் உள்ளே போகும் வழியை அமைக்கிறீர்கள்.
10. அட்மின் அக்கவுண்ட்: பெரும்பாலான எக்ஸ்பி சிஸ்டம் பயனாளர்கள், அவர்களின் அட்மினிஸ்ட் ரேட்டர் அக்கவுண்ட்டிலேயே, தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணிபுரிவார்கள். கம்ப்யூட்டர்களில் மாற்றங்கள் ஏற்படுத்த, இந்த அக்கவுண்ட் வழி செல்ல வேண்டும் என்றாலும், மற்ற நேரங்களில் வேறு ஒரு அக்கவுண்ட் வழி சென்று பயன்படுத்தலாம். ஏனென்றால், அட்மின் அக்கவுண்ட் வைரஸ்களை எளிதில் உள்ளே வரவழைக்கும்.
11. சிஸ்டம் ட்ரே கிளீன்: உங்களுடைய டாஸ்க்பாரின் வலது பக்கம் சிஸ்டம் ட்ரேயில் பல ஐகான்கள் உள்ளனவா? இவை எல்லாம் உங்களைக் கேட்காமலேயே இயங்கிய புரோகிராம்களின் தடங்கள். இவை எல்லாம் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில், நீங்கள் அறிந்தோ அறியாமலோ இயக்கப்பட்டுப் பின்னணியில் இருக்கும். இங்கிருக்கும் புரோகிராம்கள் தேவையா என சிறிய கால இடைவெளியில் பார்த்துத் தேவைப்படாதவற்றை நீக்கவும். கண்ட்ரோல் பேனலில் Notification Area Icons என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கீழாகவுள்ள Always show all icons and notifications on the taskbar என்ற பிரிவில் செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இதன் மூலம் உங்கள் சிஸ்டம் ட்ரே எவ்வளவு கூட்டமாக இருக்கிறது என்று தெரியவரும். இதில் தேவைப்படாத ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Close என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அந்த குறிப்பிட்ட புரோகிராம், இயக்கத்தில் இருந்து நீக்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரி இதற்காக உங்களுக்கு நன்றி சொல்லும்.
12. மின் சிக்கனம்: லேப்டாப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் பேட்டரியின் திறனைச் சற்று சிக்கனமாகப் பயன்படுத்தலாமே. இதற்கான Power Settings அமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்துங்கள். கண்ட்ரோல் பேனலில்Power Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருப்பதனைக் காணலாம். உங்கள் லேப்டாப் பயன்பாட்டிற்கேற்ப, இதில் விருப்பங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தவும்.
- DINAMALAR
Saturday, September 4, 2010
Wednesday, September 1, 2010
எந்த வகை கீபோர்ட்-லும் மின்னல் வேக தட்டச்சு செய்ய புதிய வழி முறை.
தினமும் புதிது புதிதாக வரும் தட்டச்சு பலகையிலும் நாம்
திறமையான முறையில் வேகமாக தட்டச்சு செய்வது எப்படி
என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
டெஸ்க்டாப் கணினியில் மட்டும் அல்ல மடிக்கணினியிலும் நாம்
மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யலாம், எந்த தட்டச்சு வகுப்பு
செல்ல வேண்டியதில்லை,எந்த பணச்செலவும் இல்லாமல் நம்
நேரத்தை மட்டுமே செலவு செய்து எளிதாக இருக்கும் இடத்தில்
இருந்து தட்டச்சு பலகலாம். கணினி வல்லுனர்களில் பலபேர்
தட்டச்சு செய்வதற்கு சில மணி நேரம் செலவளிக்கின்றனர்
இந்த நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் நம் தட்டச்சு வேகத்தை
அதிகப்படுத்துவதற்காகவும் ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.typinglessons-online.com/EN/
இந்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகை விசைப்பலகை
பயன்படுத்துகிறோம் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது
தான் அடுத்து அவர்கள் சில வகை பயிற்சிகள் கொடுக்கின்றனர்
எளிதாகவும் புதுமையாகவும் இருக்கிறது. அவர்கள் கொடுக்கும்
எழுத்துக்களை நாம் தட்டச்சு செய்யவேண்டும் அதில் எத்தனை
சரி என்று உடனுக்கூடனே காட்டிவிடுகின்றனர்.தட்டச்சு பலகையின்
படமும் திரையில் தெரிகிறது. தினமும் சில மணி நேரம் செலவு
செய்தால் கண்டிப்பாக நாமும் மின்னல் வேகத்தில் தட்டச்சு
செய்யலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, கண்டிப்பாக இந்தப்
பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

Tuesday, August 31, 2010
யூடுப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய சில தளங்கள்
யூடுப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய
http://www.downloadyoutubevideos.com/
http://downloadyoutubevideo.org/
http://www.videodl.org/
http://vixy.net/
http://www.downloadfromyoutube.com/
http://javimoya.com/blog/youtube_en.php
***************************************************************************************************************************

விண்டோஸ் எக்ஸ்புளோரர்-
விண்டோஸ் டாஸ்க் மானேஜர் (Windows Task Manager) குறித்துக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனைச் சார்ந்து கண்ட்ரோல்+ஆல்ட்+ டெலீட் என்ற சொல் தொடரும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஏதேனும் கிராஷ் ஆனாலோ, அல்லது வழக்கத்திற்கு மாறாக இயங்கினாலோ, இதனை இயக்கிப் பார்ப்பதுதான் சிறந்த தீர்வு. இதனைத் திறந்து பார்த்து வேறு ஏதேனும் ஒரு புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரின் திறன் அனைத்தையும் எடுத்துக் கொண்டு இயங்குகிறதா என்று கவனிக்கவும்.
பெரிய போல்டர்களைப் பார்க்கும் போது அல்லது கரப்ட் ஆன தம்ப் நெயில் படங்கள் அடங்கிய பைல்கள் இருக்கும் போது, எக்ஸ்புளோரர் சற்று பின் வாங்கும். அப்போது உங்கள் பைல் பிரவுசிங் பணி தடைப்படும். முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் செயல்பாடு என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உங்கள் கம்ப்யூட்டருக்கும் இடையே செயல்படும் ஒரு யூசர் இன்டர்பேஸ். டெஸ்க்டாப், போல்டர், விண்டோஸ் என அனைத்தையும் நீங்கள் காண ஒரு பாலமாக இயங்குகிறது. எக்ஸ்புளோரர் மெதுவாக இயங்கும்; ஆனால் கிராஷ் ஆகாது. எனவே தான் விண்டோஸ் தானாக ரீஸ்டார்ட் ஆகாமல், உங்களிடம் அந்த வேலையை எதிர்பார்க்கிறது.
PRESS CTRL+ ALT+ DELETE
எக்ஸ்புளோரரை நிறுத்த விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் செல்லவும். இதில் Processes என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். இது பார்ப்பதற்குச் சற்று குழப்பமாக இருந்தாலும், இதில் கிடைக்கும் தகவல்கள் எளிமையானவையே. இங்குதான் உங்கள் கம்ப்யூட்டரின் பின்னணியில் இயங்கும் புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படும். சில புரோகிராம்களின் பெயர்கள் வித்தியாசமாக இருக்கும். இதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாம் பார்க்க வேண்டியது Explorer.exe தான். இதனைக் கண்டறிந்த பின், இதன் மீது ஒரு முறை லெப்ட் கிளிக் செய்திடவும். இது ஹைலைட் ஆகும். பின் ரைட் கிளிக் செய்தால் ப்ராசஸ் மெனு கிடைக்கும். அடுத்த ஸ்டெப் எடுக்கும் முன், வேறு விண்டோக்கள் திறக்கப்படவில்லை என்பதனை உறுதி செய்து கொள்ளவும். பின் Explorer.exe என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இது எக்ஸ்புளோரர் இயங்குவதை நிறுத்தும். இப்போது உங்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள ஐகான்கள் அனைத்தும் மறைந்து போகும். கவலைப்பட வேண்டாம். அதைத்தான் எக்ஸ்புளோரர் செய்கிறது. இனி விண்டோஸ் இயக்கத்தினை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும். டாஸ்க் மேனேஜரில் ஒரு பைல் மெனு கிடைக்கும். டாஸ்க் மேனேஜரில் மேலாக உள்ள File என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். அடுத்து New Task என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இப்போது Create New Task என்று ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இங்கு கிடைக்கும் பாக்ஸ், ரன் பாக்ஸ் போல செயல்படும். பாக்ஸில் explorer என்று டைப் செய்து ஓகே கிளிக் செய்திடவும். இனி உங்கள் டெக்ஸ்டாப், அதன் ஐகான்களுடன் காட்டப்படும். ஆஹா! இயங்கி, முடங்கிய ஒரு புரோகிராமினை நிறுத்தி மீண்டும் இயக்கிவிட்டீர்கள். பெரிய அளவில் பைல் பிரவுசிங் செய்து, தளர்ச்சி அடையும் போதெல்லாம், டாஸ்க் மேனேஜர் மூலம் இந்த புத்துணர்ச்சி கிடைக்கும் வேலையை மேற்கொள்ளலாம்.

கீபோர்ட்-ல் எந்த கீ பழுதானாலும் நாம் தட்டச்சு செய்யலாம்
கணினி பயன்படுத்தும் நாம் அனைவருவே தெரிந்து வைத்துக்கொள்ள
வேண்டிய முக்கியமான தகவல் தான் இந்தப்பதிவு கீபோர்ட்-ல் எந்த
கீ பழுதானாலும் நாம் பிரச்சினை இல்லாமல் தட்டச்சு செய்யலாம்.
இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து நண்பர் கிருஷ்ணன்
அவரது மடிக்கணினியில் இரண்டு கீ (பொத்தான்) வேலை
செய்யவில்லை இதனால் அந்த குறிப்பிட்ட கீயைப் பயன்படுத்த
முடியவில்லை என்றும் கூறி இருந்தார். சரி நாமும் இவருக்காக
தேடிய போது சில மென்பொருட்கள் கிடைத்தது. கூடவே அதிசயமான
ஒன்றும் கிடைத்தது இதுவரை நாம் இதைப் பயன்படுத்தி இருப்போமா
என்று கூட தெரியவில்லை எந்த மென்பொருளும் இல்லாமல்,
ஆன்லைன் கூட செல்லாமல், நம் கணினியில் Start – > ALL PROGRAMS->
ACCESSORIES-> ACCESSIBILITY-> ON SCREEN KEYBOARD
கொடுத்தால் போதும் ஆன் ஸ்கிரின் கீபோர்ட்
ஒன்று நம் கண்முன்னால் வருகிறது. எந்த கீ தட்டச்சு செய்ய
வேண்டுமோ அந்த கீ மேல் மவுஸ்-ஐ வைத்து சொடுக்கினால்
போதும் எளிதாக நாம் அந்த கீ-யைப் பயன்படுத்த முடிகிறது.
படம் 3
குழந்தைகள் பயன்படுத்தும் சிலவகையான மடிக்கணினியில்
கண்டிப்பாக சில கீ பொத்தான் வேலை செய்யாமல் இருக்கும்
அவர்களுக்கும், கணினி பயன்படுத்தும் நாமும் தெரிந்து
வைத்திருக்க வேண்டிய முக்கியமான பதிவாக இது இருக்கு

Subscribe to:
Posts (Atom)