Wednesday, September 1, 2010

எந்த வகை கீபோர்ட்-லும் மின்னல் வேக தட்டச்சு செய்ய புதிய வழி முறை.

தினமும் புதிது புதிதாக வரும் தட்டச்சு பலகையிலும் நாம்

திறமையான முறையில் வேகமாக தட்டச்சு செய்வது எப்படி

என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.



டெஸ்க்டாப் கணினியில் மட்டும் அல்ல மடிக்கணினியிலும் நாம்

மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்யலாம், எந்த தட்டச்சு வகுப்பு

செல்ல வேண்டியதில்லை,எந்த பணச்செலவும் இல்லாமல் நம்

நேரத்தை மட்டுமே செலவு செய்து எளிதாக இருக்கும் இடத்தில்

இருந்து தட்டச்சு பலகலாம். கணினி வல்லுனர்களில் பலபேர்

தட்டச்சு செய்வதற்கு சில மணி நேரம் செலவளிக்கின்றனர்

இந்த நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் நம் தட்டச்சு வேகத்தை

அதிகப்படுத்துவதற்காகவும் ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.typinglessons-online.com/EN/

இந்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த வகை விசைப்பலகை

பயன்படுத்துகிறோம் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது

தான் அடுத்து அவர்கள் சில வகை பயிற்சிகள் கொடுக்கின்றனர்

எளிதாகவும் புதுமையாகவும் இருக்கிறது. அவர்கள் கொடுக்கும்

எழுத்துக்களை நாம் தட்டச்சு செய்யவேண்டும் அதில் எத்தனை

சரி என்று உடனுக்கூடனே காட்டிவிடுகின்றனர்.தட்டச்சு பலகையின்

படமும் திரையில் தெரிகிறது. தினமும் சில மணி நேரம் செலவு

செய்தால் கண்டிப்பாக நாமும் மின்னல் வேகத்தில் தட்டச்சு

செய்யலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, கண்டிப்பாக இந்தப்

பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

No comments:

Post a Comment