தற்போதைய மொபைல் போன்கள் அனைத்திலும் ப்ளு-டூத் வசதி இருப்பதாக விளம்பரம் செய்திருப்பார்கள். அதென்ன ப்ளு-டூத்? முன்னொரு காலத்தில் ப்ளு-டூத் என்றொரு அரசன் இருந்தான். அவனுக்கு பற்கள் நீலக்கலரில் இருந்தன. இதனால் தான் அந்த பெயர். அந்தக்காலத்தில் சிதறிக்கிடந்த ஸ்காண்டி நேவிய நாடுகளையெல்லாம் அவன் ஒன்றாக சேர்த்து, ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தானாம். அதனால் தான் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களையெல்லாம் அவன் மன்னனின் பெயரை வைத்து விட்டனர். பெயர் வித்தியாசமாக இருந்ததும் ஒரு காரணம்.
தற்போதைய மொபைலை மூன்று தலைமுறையாக பிரிக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் அமெரிக்கா கண்டுபிடித்த மொபைல் போன் அனலாக் முறையில் வேலை செய்தது. இது முதல் தலை முறை தொழில் நுட்பம். அதாவது 1ஜி. (முதல் ஜெனரேஷன்). இப்போது நாம் பயன்படுத்துவது 2ஜி என்ற இரண்டாம் தலை முறை தொழில் நுட்பம். இது டிஜிட்டல் இணைப்பு முறையாகும். இதன்மூலம் பேச்சு மட்டுமின்றி பாடல்கள், படங்கள் போன்றவற்றை அனுப்பி பெற முடிகிறது. இதற்கு அடுத்தடுத்து 3ஜி எனப்படும் 3ம் தலைமுறை தொழில்நுட்பம். இதன்மூலம் முகம்பார்த்து பேசுவது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும்.
ப்ளு-டூத் என்பது 2.4 கிலோ ஹெர்ட்ஸ் ரேடியோ அலைகளை பயன்படுத்தி 720 கிலோ பிட் வேகத்தில் பரிமாற்றம் நடக்கிறது. தற்போது பரவலாக மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் இந்த ப்ளு-டூத் வசதி மூலம் கம்ப்யூட்டர்கள், கீ போர்டுகள், பிரிண்டர்கள், மியுசிக் சிஸ்டம், வாசிங் மெஷின்கள், மைக்ரோ வேவ் ஓவன் உள்ளிட்ட எந்த பொருளையும் ப்ளு-டூத் வசதி மூலம் எங்கிருந்தும் இயக்க முடியும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு டெக்னிக்கல் முகவரி அதாவது ஐ.டி. கொடுக்க வேண்டும். இவற்றை இயக்குவதில் ரகசியமும், பாதுகாப்பும் கொடுக்கப்படும். இந்த தொழில் நுட்பத்தை முதன்முதலாக பயன்படுத்தியது, எரிக்சன் என்ற ஐரோப்பிய நிறுவனம். பின்னர் ஐ.பி.எம்., இன்டெல், மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து கொண்டன. ப்ளு-டூத் தொழில் நுட்பத்தால் எதிர்காலத்தில் கேபிளே இல்லாமல் அனைத்தும் காற்றில் இயங்கும் நிலை வரலாம்
Thanks To : http://puthiyaulakam.com/?p=2237