Thursday, December 17, 2009

ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய..


Start மெனுவில் சென்று உங்கள் கணினியை Restart செய்வது தாமதமான
செயலாக இருக்கிறதா ? நீங்கள் விரும்பினால் ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய வைக்கலாம். அது மட்டும் இன்றி எவ்வளவு நேரம் கழித்து Restart ஆகவேண்டும் என்றும் தீர்மானிக்கலாம். அரை நிமிடம் அல்லது ஒரு நிமிடம் என்று அமைத்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் வேலையும் எளிதாகிறது. நேரமும் குறைகிறது. மின்சார செலவும் குறைய வாய்ப்பல்லவா ? இதை நீங்கள் இயக்கியவுடன் உங்களின் அனைத்து பயன்பாடுகளையும் தானாகவே மூடிவிட்டு Restart செய்கிறது. அனால் எல்லாவற்றையும் முன்பே நீங்கள் சேமித்து கொள்ள வேண்டும்.இந்த வேலையை செய்யுமாறு ஒரு Shortcut iconஉருவாக்குவது எப்படி மட்டும் பார்ப்போம்.


1.உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து வரும் பட்டியில்
New -> Shortcut Icon என்பதை தேர்வு செய்யுங்கள்.


2. அடுத்தது குறுக்கு விசைக்கான இடத்தை கேட்கும். ( Location ). அதில் கீழ்க்கண்ட வரியை அடிக்கவும்.
shutdown -r -t 30 
(இதில் 30 என்பது விநாடிகளை குறிக்கிறது. உங்களுக்கு ஒரு நிமிடம் கழித்து ஆக
வேண்டும் எனில் 60 என்று கொடுக்கவும். )

3. அடுத்து குறுக்கு விசைக்கான ( Shortcut icon ) பெயரை தரவும். உதாரணமாக
Restart என்று கொடுத்துவிட்டு முடித்து விடுங்கள்.

4. இப்போது நீங்கள் இந்த Shortcut icon ஐ கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு
விண்டோஸ் உதவிப்பெட்டி தோன்றி அனைத்தையும் சேமியுங்கள் என்று எச்சரிக்கை செய்தியை அளிக்கும். நீங்கள் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் தானாக Restart ஆகிவிடும்.

5. சரி நீங்கள் தவறாக Restart கொடுத்துவிட்டீர்கள். இதை எப்படி தடுப்பது என்று நினைத்தால்,
Start -> Run சென்று shutdown -a என்று அடித்தால் போதும். உங்கள் கணினி Restart ஆவது தடுக்கப்படும். www.ambaisuresh.blogspot.com

ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.

ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.

1.Eraser


தரவிறக்கச்சுட்டி :
http://sourceforge.net/projects/eraser/files/Eraser/Eraser-5.8.7_setup.exe/download

கணினியில் உட்காரும் போது சில யோசனைகள்

நாள் தோறும் கணினியில் பணிபுரிபவர்கள் சில விசயங்களை
கவனிப்பதில்லை. விசைப்பலகை மற்றும் மவுஸ் எப்படி
உபயோகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவதில்லை.
இதை சாதாரணமாக நினைத்தால் பின்னாளில் பெரிய
ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். கார்பல் டன்னல்சிண்ட்ரோம் (Carpal tunnel Syndrome) என்ற நோய் இதனால்
ஏற்படுகிறது தெரியுமா? இந்த நோய் வந்தவர்களுக்கு செய்யப்படும்
சிகிச்சை பற்றிய படங்களை கீழே பாருங்கள்







தவறாக பயன்படுத்துவதும் சரியாக பயன்படுத்துவதும்












இந்த நோய் வராமல் தடுப்பதற்கான பயிற்சிகள்:





இதைப்பற்றிய சில காணொளிகள்:

http://www.youtube.com/watch?v=XCcplgeQzrU

http://www.youtube.com/watch?v=ஹுய்ம்ன்ய்ரோத்ஜ்

மேலும் இதைப்பற்றி கார்த்திக்கின் ஒரு கட்டுரை
http://honey-tamil.blogspot.com/2009/03/udkaarum.html

Win XP – இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி


Win XP – இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி ?

உங்களிடம் இருப்பது விண்டோஸ் XP எனில் இந்த முறையைப்பின்பற்றி உங்களின் இனைய இணைப்பின் வேகத்தை சிறிது அதிகரித்துக் கொள்ளலாம்.  முயன்று பார்த்து வித்தியாசமாகவிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க நண்பர்களே.
முதலில் அட்மினிஸ்ரேட்டர் அக்கவுண்ட் அல்லது அட்மினிஸ்ரேட்டருக்குரிய உரிமைகளனைத்துமிருக்கும் அக்கவுண்டில் நீங்க இருக்க வேண்டும்.
1. 1. Start – Run – type gpedit.msc
1
2. இடது பக்கத்தில் உள்ள Local Computer Policy என்பதை விரிவாக்கி கீழ்க்கண்ட ஒழுங்கில் செல்லவும்.
Administrative Templates / Network Branch வரை சென்று அங்கு QoS Packet Scheduler என்பதனை தெரிவு செய்யவும்.
3. பின்னர் வலது பக்கம் வரும் Limit reservable bandwidth என்பதனை இரட்டைச்சொடுக்கு மூலம் திறக்கவும்.
21
4. Setting tab இனில் Enable என்பதனை தெரிவு செய்யவும்.
5. Bandwidth limit % எனுமிடத்தில் 0 ( பூச்சியம்) என இட்டு OK பட்டனை அழுத்தவும்.
3
அவ்வளவுதான்.
XP யானது சாதாரணமாகவே இணைய இணைப்பில் சுமார் 20% இனை தனது தேவைக்கு ஒதுக்கி விடும்.  QoSஇனை disable பண்ணியிருந்தாலும் இப்படித்தான் இருக்கும். QoS ஆனது நமது வீட்டுப்பாவனைக்கு  தேவையில்லாத ஒன்று. QoS பயன்படுத்தவில்லையெனில் XP யானது ஒதுக்கி வைத்த 20% த்தினை நாமாவது பயன்படுத்தலாம். அதற்குத்தான் இந்தப்பதிவு.  ஆனால் உங்களிடம் அதிவேக இணைய இணைப்பிருந்தால் இந்தப்பதிவில் சொல்லியபடி செய்தாலும் எந்த வித்தியாசமும் தெரியாது. டயல் அப் கனக்ஷன் வைத்திருப்பவர்களுக்கு வேகம் அதிகரிக்கும்.
உங்களுக்கும் வித்தியசம் தெரிகிறதாவென பின்னூட்டத்தில் சொல்லுங்க…