மானிட்டர் இயங்கவில்லை என்றால்...
சில நேரம் கம்ப்யூட்டரை பூட் செய்த பின் மானிட்டரில் எதுவும் தோன்றாமல் வெறுமையுடன் காட்சியளிக்கும். கூடவே, அதிக சத்தத்துடன், ஒரு பீப் ஒலி கேட்கும். இது போன்ற நேரங்களில் கம்ப்யூட்டரின் கதை அவ்வளவு தானா எனக் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் கம்ப்யூட்டருக்கு பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டிருக்காது. தொடர்ந்து பீப் ஒலி கேட்டுக்கொண்டிருந்தால், மானிட்டரில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதியாகச் சொல்லலாம். உடனே சிக்கலை கவனிக்க வேண்டும்.
மானிட்டர் கேபிள் சரியாக பொருத்தப்படவில்லையென்றால்கூட, சிக்கல்கள் எழும். எனவே, மானிட்டரிலிருந்து சி.பி.யு.,வுக்கு செல்லும் கேபிளை நன்கு சோதிக்கவும். கேபிள் லுõசாக இருந்தால், அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யவும். இதன் பிறகு பூட் செய்தாலும் அதே பிரச்னை மீண்டும் தோன்றினால், கம்ப்யூட்டர் சி.பி.யு மூடியை அகற்றி விட்டு வீடியோ கார்டை சோதிக்கவும். அதன் எக்ஸ்டென்ஷனில் சரியாக பொருந்தியுள்ளதா என்பதை சரிபார்க்கவும். அத்துடன் மதர்போர்டில் பொருத்தப்பட்டுள்ள வீடியோ போர்ட் இணைப்பு சரியாக உள்ளதா என ஒரு முறை உறுதி செய்து கொள்ளவும்.
வீடியோ கார்டு சரியாக பொருத்தப்படாமல் இருப்பதால் மட்டும் தான் மானிட்டருக்கு பிரச்னை வரும் என முடிவு செய்துவிடக் கூடாது. மற்ற கார்டுகள் சரியாக பொருத்தப்படாமல் இருந்தாலும், அவை வீடியோ கார்டை பாதிக்கும். எனவே, பி.சி.ஐ., உள்பட சி.பியு., வில் உள்ள அனைத்து கார்டுகளும் சரியாக பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.
கடைசியாக பவர் சப்ளை பகுதியை சோதிக்கவேண்டும். மானிட்டரிலிருந்து சி.பியு., வுக்கு செல்லும் பவர் கேபிள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சோதிக்கவும். இதன் பின் நிச்சயம் உங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இத்தனை சோதனைகள் செய்த பிறகும் சிக்கல் தொடர்ந்தால், நல்ல சர்வீஸ் இன்ஜினியரை அணுகவும்.
No comments:
Post a Comment