Saturday, August 29, 2009

System restore

சிஸ்டம் ரீஸ்டோர் (மீட்டெடுத்தல்) என்பது விண்டோஸ் எக்ஸ்பியில் வந்துள்ள புதிய வசதி. கம்ப்யூட்டரில் அப்ளிகேஷன்கள் அல்லது முக்கிய மென்பொருள்கள் பாதிக்கப்படும் போது, முக்கியமான டேட்டாக்களை முன்பு இருந்த நிலையிலேயே அவற்றை இந்த ரீஸ்டோர் மீட்டெடுத்து உங்களுக்குக் கொடுக்கும்.



விரிவாகக் கூறப்போனால், புதிதாக சில டிரைவர்களை இன்ஸ்டால் செய்யும்போது, அப்ளிகேஷன்கள் அல்லது கம்ப்யூட்டரில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியதிருக்கும். அப்போது, அந்த அப்ளிகேஷன்களுடன் தொடர்புடைய டேட் டாக்களை ரீஸ்டோர் செய்து வைத்தால், பின்னர் மாற்றம் செய்யப்பட்ட அப்ளிகேஷன்கள் பழுதடையும்போது டேட்டாக்களை பழைய நிலையிலிருந்து மீட்டெடுக்கலாம்.



இந்த வசதியை இயக்க, ஸ்டார்ட் மெனுவில் ProgramsAccessories -System Tools - System Restore செல்லவும். உடனே ஒரு திரை தோன்றி, உங்கள் முந்தைய டேட்டாவை மீட்டெடுக்க வேண்டுமா, அல்லது புதிய ரீஸ்டோர் பாய்ன்ட் திறக்க வேண்டுமா எனக் கேட்கும். தேவையானதை தேர்வு செய்தபின், உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாடுகளை ரீஸ்டோர் பாய்ன்ட் கண்காணித்துக்கொண்டே இருக்கும். ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால் டேட்டாக்களை மீட்டெடுக்கும்.

No comments:

Post a Comment