Saturday, August 29, 2009

கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்பவரா நீங்கள்

கம்ப்யூட்டரில் பணி புரியும் பெரும்பாலானோர் தங்களது பணிகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும் செய்ய வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள் ஆனால் தங்களது கண்களை பாதுகாக்க தவறிவிடுவார்கள்.


கம்ப்யூட்டரில் தினந்தோறும் மணிக்கணக்கில் அமர்ந்து பணிபுரிபவர்களுக்கு கண் தொடர்பான பல்வேறு நோய்கள் ஏற்படும். தினந்தோறும் இரண்டு மணி நேரத்துக்கு அதிகமாக பணிபுரிபவர்களுக்கு கூட கம்ப்யூட்டர் கண் கோளாறுகள் வர வாய்ப்புள்ளது.



இதுதவிர, தலைவலி, பார்வை தடுமாற்றம், கண் சோர்வு, அசதி, எதை பார்த்தாலும் இரண்டாக தெரிவது, கழுத்து வலி, முதுகு வலி போன்றவை மற்றும் பார்வை மங்குதல் போன்றவையும் ஏற்படும்.அதிக நேரம் மிகவும் வெளிச்சமான பகுதியையே பார்த்துக்கொண்டிருப்பதால் கண்களும், மூளையும் தளர்ச்சி அடைகின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் கண்கள் பலவீனம் அடைய ஆரம்பிக்கின்றன.



கம்ப்யூட்டரின் மையப் பகுதிக்கும், ஓரப்பகுதிகளுக்கும் இடையேயான வெளிச்சத்தின் அளவு வித்தியாசப்படுவதால், ஒரே இடத்தில் பார்வையை பதிக்க முடியாமல் கண்கள் சோர்வடைகின்றன. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளிலிருந்து கண்களை காப்பாற்ற சில எளிய வழிகள் உங்களுக்காக.



கம்ப்யூட்டரின் வெளிச்சம் கண்களை உறுத்தாத வகையில் மிதமாக குறைத்துக் கொள்ளுங்கள்.



தெளிவான, அகன்ற கம்ப்யூட்டர் திரைகளை பயன்படுத்துங்கள்.



அடிக்கடி கண்களை திறந்து மூடுங்கள்.

No comments:

Post a Comment